அட்லிக்கு டாக்டர் பட்டம்: சத்யபாமா பல்கலைக்கழகம் வழங்குகிறது | பிளாஷ்பேக்: விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஈடுகட்டிய என்.எஸ்.கிருஷ்ணன் | பிளாஷ்பேக்: விஜய் படத்தை நிராகரித்த அஜித் | ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' |
அமெரிக்க தொலைக்காட்சியில் புகழ்பெற்ற நிகழ்ச்சி குட் மார்னிங் அமெரிக்கா. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ராம்சரண் கலந்து கொண்டுள்ளார். இதில் தொகுப்பாளர்களின் கேள்விகளுக்கு எந்த தயக்கமும் இல்லாமல் ராம்சரண் பதிலளித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம் தென்னிந்திய நடிகர்களில் முதன்முறையாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலம் என்ற பெருமையை ராம் சரண் பெற்றிருக்கிறார். இந்நிலையில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ராம்சரண், ‛‛ராஜமௌலி அடுத்ததாக மகேஷ்பாபு நடிப்பில் பிரம்மாண்ட படம் ஒன்றை இயக்க இருக்கிறார். விரைவில் அவர் ஹாலிவுட் படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது'' என்றார்.