செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? | போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன் | இணையதள தேடல் : தீபிகா படுகோன் | உணவு கூட தராமல் கொடுமைப்படுத்தினர் : விஷால் பட ஹீரோயின் மீது பணிப்பெண் பரபரப்பு புகார் | கேமரா என்னை அழைக்கிறது : படப்பிடிப்புக்கு திரும்பினார் மம்முட்டி | பிளாஷ்பேக் : நிஜமான குத்துச்சண்டை காட்சி இணைக்கப்பட்ட படம் | காந்தாரா சாப்டர் 1 : முதல் நாளில் 100 கோடியை கடக்குமா? |
அஜித் குமார் நடிக்கும் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக லைகா புரொடக்ஷன்ஸ் அறிவித்திருந்தனர். ஆனால் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி தான் இயக்கப்போவதாக தகவல் வெளியானது. இதனை உறுதி செய்யும் வகையில் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பயோவில் இருந்து அஜித் 62 படத்தின் தலைப்பை நீக்கினார் .
தற்போது அந்த மன உளைச்சலில் இருந்து வெளிவந்து தன் அடுத்த படத்தின் பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் தனது அடுத்த படத்தில் லவ் டுடே படத்தில் ஹீரோ மற்றும் இயக்குனராக கலக்கிய பிரதீப் ரங்கநாதனை அணுகியுள்ளார் விக்னேஷ் சிவன். அவரை தொடர்ந்து அந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியிடம் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றார். இந்த படத்தை பற்றி கூடிய விரைவில் அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.