2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
தனுஷ் தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ள படம் 'வாத்தி'. இந்த படம் வெளியாகி 50 கோடிக்கும் மேலும் வசூல் செய்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து வெளியான வா வாத்தி பாடல் மிகப்பெரிய ஹிட்டானது. தனுஷ் பாடல் வரிகளை எழுத ஸ்வேதா மோகன் பாடியிருந்தார் .
சமீபத்தில் வாத்தி இசை வெளியீட்டு விழா மற்றும் பட விளம்பர நிகழ்ச்சிகள் கலந்துகொண்ட தனுஷ் மேடைகளில் வா வாத்தி பாடலை பாடி அசத்தினார் . ரசிகர்களும் அவரது குரலில் இப்பாடலை வெளியிடும்படி கோரிக்கை வைத்தனர் . இந்நிலையில் தனுஷ் குரலில் வா வாத்தி பாடல் விரைவில் வெளியிடப்போவதாக ஜி வி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .