'டிரெயின்' படத்திற்காக களத்தில் இறங்கிய தாணு! | 'ஓ.ஜி' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | 'மகுடம்' படத்தில் துஷாரா விஜயன் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு! | லோகேஷ் அழைத்தால் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன் : அர்ஜுன் தாஸ் | காந்தாரா சாப்டர் 1க்கு டப்பிங் பேசிய ருக்மணி வசந்த் : செப்., 22ல் டிரைலர் ரிலீஸ் | ரூ.100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் மதராஸி | சென்னையில் மழை : படகு சவாரி கேட்ட பூஜா ஹெக்டே | பேரனுக்கு நாளை(செப்.,19) காது குத்து விழா வைத்திருந்த நிலையில் ரோபோ சங்கர் மரணம் | ரோபோ சங்கர் உடலுக்கு கமல் அஞ்சலி | பிளாஷ்பேக்: அமரத்துவம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் “அமரகவி” |
ஆர்.சந்துரு இயக்கத்தில் கிச்சா சுதீப், உபேந்திரா, ஸ்ரேயா நடித்துள்ள படம், 'கப்ஜா கன்னடத்தில் தயாராகியுள்ள இந்த படம் வருகிற மார்ச் 17ம் தேதி கன்னடம், தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு உள்பட 7 மொழிகளில் வெளியாகிறது.
இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் ஸ்ரேயா பேசியதாவது: தமிழ் சினிமா எனக்கு நிறைய கொடுத்துள்ளது. அதனால் தான் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். நான் மிகவும் சிரமப்பட்டு நடித்த படம் இது. பெரும்பகுதி படப்பிடிப்பு அரங்கம் அமைத்து படமானது. அந்த அரங்கங்களில் தூசி நிறைய இருந்தது. இதனால் சைனஸ் பிரச்சினையால் அவதிப்பட்டு நடித்தேன்.
தற்போது உருவாகும் படங்கள் பான் இந்தியா படங்களாக மொழிகள் மற்றும் எல்லைகளைக் கடந்து மிகப்பெரிய வெற்றி பெறுகின்றன. வசூலிலும் சாதனை படைக்கின்றன. இதன்மூலம் சினிமாவுக்கு மொழி முக்கியம் இல்லை என்பது உறுதியானது. அனைத்துப் படங்களையும் அனைத்து தரப்பு மக்களும் பார்த்து ரசிக்கின்றனர். அந்த வரிசையில் இந்த படமும் அனைவருக்கும் பிடிக்கும். தொடர்ந்து நான் சினிமாவில் நடிக்க கணவர் அதிக ஒத்துழைப்பு தருகிறார். ரசிகர்களின் அன்பும், ஆதரவும் இருக்கும் வரை தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்.
எனது பெரிய ஆசை என்னவென்று கேட்டால் சிவாஜி படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தேன் மீண்டும் அவரது ஜோடியாக நடிக்க ஆசை. அந்த வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன். என்றார்.