டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன், மீண்டும் ஒரு காதல் கதை, திருச்சிற்றம்பலம் படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் அடுத்து இயக்கும் படம் அரியவன். இதில் ஈஷான், பிரணாலி என்ற புதுமுகங்களுடன் டேனியல் பாலாஜி, சத்யன், கல்கி ராஜா உள்பட பலர் நடிகிறார்கள். கே.எஸ்.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.ஜி.பி மாஸ் மீடியா தயாரிக்கிறது.
பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிராக தனிமனிதனாக போராடும் ஹீரோவின் கதை. மாரிசெல்வத்தின் கதையை மித்ரன் ஜவஹர் இயக்கி உள்ளார். இது ஒரு குறுகிய கால தயாரிப்பாக உருவாகி உள்ளது. அடுத்த மாதம் வெளிக்கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள்.
இதையடுத்து மாதவன் வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார் மித்ரன்.