கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் |
தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன், குட்டி, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் தற்போது இயக்கி உள்ள படம் 'அரியவன்'. ஈஷான் நாயகனாகவும், பிராணலி நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படம் நாளை மறுநாள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மித்ரன் ஜவஹர் அரியவன் படத்தை நான் இயக்கவில்லை. என் உதவியாளர்தான் இயக்கினார் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது “அரியவன் திரைப்படத்தை எனது உதவியாளர் ஒருவர்தான் இயக்கினார். கதை விவாதத்தில் கலந்து கொண்டேன். சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு சில ஆலோசனைகளை சொன்னேன். அதை தவிர படத்துக்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. விளம்பரத்தில் எனது பெயருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதால் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதற்காக இதை தெரிவிக்கிறேன்”என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் மித்ரவன் ஜவஹர் அரியவன் படத்தை இயக்கும் வீடியோக்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.