சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் தயாரிப்பாளர் பைவ்ஸ்டார் கதிரேசன். விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளராக வலம்வந்த இவர் ஒரு கட்டத்தில் இயக்குனராக மாறி தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் ருத்ரன் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்து வருகிறார். வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இன்று இந்த படத்தில் இருந்து பாடாத பாட்டெல்லாம் என்கிற பாடல் வெளியாகிறது.
1962-ல் வெளியான வீரத்திருமகன் படத்தில் இடம்பெற்ற ஹிட் பாடல் ஆன “பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாய்” என்கிற பாடலின் ரீமிக்ஸ் பாடலாக உருவாகியுள்ளது. கதாநாயகனாக ஆனந்தன் நடித்திருந்த அந்த படத்திற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைந்து இசை அமைத்திருந்தனர். தற்போது ருத்ரன் படத்திற்காக இந்த பாடலை ரீமிக்ஸ் செய்து இசையமைத்துள்ளார் ஜி.வி பிரகாஷ் குமார். நாளை பாடல் வெளியாகிறது.