ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
நடிகரும், இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி சற்று வித்தியாசமானவர். தான் நடிக்கும் படங்களின் கதையை வெளிப்படையாக கூறுவார். அதோடு பட வெளியீட்டுக்கு முன்பே படத்தின் பல நிமிட காட்சிகளை பத்திரிகையாளர்களுக்கு வெளியிட்டு காட்டுவார். ஆனால் இந்த முறை அவர் நடித்து வரும் பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தின் முதல் 4 நிமிட(3:45 நிமிடம்) காட்சிகளை பொதுமக்களின் பார்வைக்காக இன்று (பிப்.10) மாலை 5 மணிக்கு வெளியிட்டார்.
கடந்த 2016ம் ஆண்டு இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான 'பிச்சைக்காரன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகிறது. இந்த படத்தை சசி இயக்க மறுத்து விட்டதால் விஜய் ஆண்டனியே இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற்றபோது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உடல் நலம் பெற்று வரும் அவர் தற்போது ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் படத்தின் 4 நிமிட முதல் காட்சியை வெளியிட்டுள்ளார்.
மூளைமாற்று அறுவை சிகிச்சையை பின்னணியாக கொண்டு இந்த படம் இருக்கலாம் என டிரைலரை பார்க்கும்போது புரிகிறது. தற்போது வெளியிடப்பட்ட முன்னோட்ட வீடியோவில் விஜய் ஆண்டனி தோன்றவில்லை.
வீடியோ லிங்க் : https://www.youtube.com/watch?v=J0UhX8gCFo8