Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

மீண்டும் சீண்டிய பிரகாஷ்ராஜ் : காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர் பதிலடி

10 பிப், 2023 - 10:26 IST
எழுத்தின் அளவு:
Vivek-Agnihotri-reply-to-Prakashraj

கடந்தாண்டு துவக்கத்தில் ஹிந்தியில் காஷ்மீர் பைல்ஸ் என்கிற படம் வெளியாகி அரசியல் அரங்கில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. காஷ்மீரில் பண்டிட்டுகள் பலர் கொல்லப்பட்டது மற்றும் அங்கிருந்து பலர் அகற்றப்பட்டதன் பின்னணியை மையமாக வைத்து இந்தப்படம் உருவாகி இருந்தது.

விவேக் அக்னிகோத்ரி யக்கிய இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றது. அதேசமயம் இந்த படத்திற்கு எதிரான கருத்துக்களும் அப்போது கிளம்பின. குறிப்பாக காஷ்மீர் பைல்ஸ் இயக்குனருக்கு சில கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தற்போது அவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு கூட வழங்கப்பட்டது

இந்த படம் வெளியான சமயத்தில் இதை கடுமையாக விமர்சித்தவர்களில் நடிகர் பிரகாஷ்ராஜும் ஒருவர். மத்திய அரசு இந்த படத்திற்கு ஆதரவு வழங்கியது. பிரகாஷ்ராஜின் கோபத்தை இன்னும் தூண்டிவிட்டது என்றே சொல்லலாம். அவ்வப்போது இந்தப்படம் குறித்து கிடைக்கும் இடங்களில் எல்லாம் விமர்சனம் செய்து வரும் பிரகாஷ்ராஜ் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற மாத்ருபூமி சர்வதேச கடிதங்கள் விழாவில் கலந்து கொண்டபோதும் தனது விமர்சனத்தை வைக்க தவறவில்லை.

இந்த நிகழ்வில் பேசிய பிரகாஷ்ராஜ், சமீப காலமாக அதிகம் பேசப்பட்டு வரும் பாய்காட் கலாச்சாரம் குறித்து பேசும்போது, அப்படியே காஷ்மீர் பைல்ஸ் படத்தைப் பற்றியும் அதன் இயக்குனர் விவேக் அக்னிகோதிரி பற்றியும் மீண்டும் கடுமையாக விமர்சித்தார். “காஷ்மீர் பைல்ஸ் ஒரு நான்சென்ஸ் படம். சமீபத்தில் சர்வதேச சூரி ஒருவரே அந்தப்படத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். அப்படி ஒரு படத்தை இயக்கிவிட்டு அந்த படத்தின் இயக்குனர் எனக்கு ஏன் ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை என்று புலம்பி கொண்டிருக்கிறார். ஆஸ்கர் அல்ல பாஸ்கர் விருது கூட அவருக்கு கிடைக்காது” என்று அந்த நிகழ்வில் பேசினார் பிரகாஷ்ராஜ்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் இயக்குனர் விவேக் அக்னிகோதிரி கூறும்போது, “மக்களுக்கான ஒரு சிறிய படம் தான் காஷ்மீர் பைல்ஸ். ஆனால் பல பேருக்கு தூக்கம் இல்லாத இரவுகளை இது கொடுத்து விட்டது. குறிப்பாக அர்பன் நக்சல்கள் கடந்த ஒரு வருடமாக இதனால் தொந்தரவுக்கு ஆளாகி இருக்கின்றனர். அது மட்டுமல்ல எனக்கு எப்படி பாஸ்கர் கிடைக்கும்.. அது எல்லாமே உங்களுக்கு மட்டும் தான் எப்போதும் உரியது” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
'கேஜிஎப் 2' வசூலை முறியடித்து 2ம் இடம் பிடித்த 'பதான்''கேஜிஎப் 2' வசூலை முறியடித்து 2ம் ... ஷாரூக் அணிந்த வாட்ச் ஒன்றின் விலை 5 கோடி? ஷாரூக் அணிந்த வாட்ச் ஒன்றின் விலை 5 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Ravi Ram - /Manchester,யுனைடெட் கிங்டம்
12 பிப், 2023 - 01:19 Report Abuse
Ravi Ram பிரகாஷ் Raj வெக்கம் கெட்டவன்
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
11 பிப், 2023 - 14:30 Report Abuse
Sridhar இந்த க்ரிப்டோவுக்கு அவன் மதம் மீதுதானே பற்று இருக்கவேண்டும்? அதை விட்டுவிட்டு இஸ்லாமிய தீவிரவாதிகள் ஹிந்துக்களின் மீது செய்த அக்கிரமங்களை காண்பிக்கும் படத்தின் மீது ஏன் கோவம்? இந்தியாவுக்கு எதிராக என்றால், முஸ்லிம்கள் கூட கூட இணைந்து கொள்வானா? அல்லது, அந்த படம் நடந்த கோரத்தாண்டவத்தை முழுவதுமாக பிரதிபலிக்கவில்லை என்று ஆதங்கப்பட்டு அதனால் படம் நல்லா இல்லை என்கிறானா?
Rate this:
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
10 பிப், 2023 - 17:30 Report Abuse
NicoleThomson சினிமா ஊடகத்தில் மதம் சார்ந்து இயங்கும் சில இனவெறி மக்களில் பிரகாஷ் ராஜும் ஒருவர் என்பது வருந்தத்தக்க நிகழ்வு
Rate this:
Devan - Chennai,இந்தியா
10 பிப், 2023 - 12:01 Report Abuse
Devan இந்த பிரகாஷ், ராஜ்க்கு மோடியை எதிர்க்க வேண்டும் அதற்கு என்ன வேண்டுமானாலும் சொல்வான். அடுத்த நாட்டுக்காரன் சொன்னது உண்மை என்கிறானே. காஷ்மீரில் நடந்த கொடுமைகளுக்கு ஆதாரம் இருக்கிறது. இது அவனுக்கு தெரியுமா? இவர்கள் இருவரும் தான் முட்டாள்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in