ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் |
துணிவு படத்தை அடுத்து அஜித் நடிக்கும் 62 வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கதையில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் அவர் அப்படத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இதையடுத்து தற்போது அஜித்தின் 62 வது படத்தை இயக்குவதற்கு மகிழ்திருமேனி கமிட்டாகி இருக்கிறார். அவர் சொன்ன கதையில் துணிவு படத்துக்கு இணையான ஆக்சன் காட்சிகள் இல்லாததால் சில திருத்தங்களை சொல்லி அதை சரி செய்ய சொல்லி இருக்கிறார் அஜித்குமார். அதோடு மகிழ் திருமேனிக்கு அஜித் ஒரு அதிரடி கண்டிஷனும் போட்டு இருக்கிறார்.
அது என்னவென்றால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படம் குறித்த அறிவிப்பு வெளியானபோது 2023ம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜைக்கு அப்படம் திரைக்கு வரும் என்று அறிவித்து விட்டார்கள். அதேப்போன்று தனது 62 வது படத்தின் அறிவிப்பு வெளியாகும் போதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்து விட்டே படத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளாராம் அஜித் குமார்.
அதோடு நான்கே மாதங்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட வேண்டும். இடையில் எந்தவித பிரேக்கும் கொடுக்கக் கூடாது என்றும் ஒரு அதிரடி கண்டிஷன் போட்டுள்ளாராம். இந்த நிலையில் அஜித் 62 ஆவது படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.