இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் |

மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் புரமோ வெளியிடப்பட்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 ஆண்டுகளுக்குப் பிறகு த்ரிஷா இணைந்துள்ளார். இப்படம் விஜய்க்கு மட்டுமின்றி த்ரிஷாவுக்கும் 67வது படம் ஆகும். இவர்களுடன் சஞ்சய் தத் , அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
இந்த நேரத்தில் கமலை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த புத்தகத்தின் ஒரு பக்கத்தில் செம்பன் வினோத் நடித்துள்ள ஜோஸ் கதாபாத்திரம் பேசும் வசனம் இடம் பெற்றுள்ளது. அதில் காஷ்மீருக்கு ஒரு கேஸ் சம்பந்தமாக போயிருந்தப்போ அவன் பழக்கமானான் என அமர் குறித்து வினோத் பேசும் வசனம் இடம் பெற்றுள்ளது. தற்போது விஜய்யின் லியோ படம் காஷ்மீரில் படமாவதால் இதுவும் எல்சியூ-வில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி லோகேஷ் கனகராஜ் படங்கள் குறித்த அடுத்த அப்டேட்டுகள் வெளியாவதால் விஜய்யின் லியோ படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் எகிற தொடங்கி இருக்கிறது.