Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் வரலட்சுமி சரத்குமார்

05 பிப், 2023 - 13:02 IST
எழுத்தின் அளவு:
Varalaxmi-Sarathkumar-Mind-blowing-Dance-for-reaching-2-million-followers-in-Instagram

தமிழில் சிம்பு நடித்த போடா போடி என்ற படத்தில் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார், அதன் பிறகு தாரை தப்பட்டை, சர்க்கார், சண்டக்கோழி- 2 உள்பட பல படங்களில் நடித்தார். சமீபகாலமாக தெலுங்கு படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியன் பாலோயர்கள் வந்ததை அடுத்து மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றுள்ளார்.

அதை வெளிப்படுத்தும் விதமாக தான் அதிரடி நடனமாடும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதோடு ‛என் மீது பொழிந்த அன்பிற்கு நன்றி. இரண்டு மில்லியன் பாலோயர்கள் என்பதை பார்த்ததும் என்னுடைய சந்தோஷத்தை பகிரவே இந்த நடனத்தை ஆடுகிறேன். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வதால் மேலும் நெருக்கமாக இருப்பதாக உணர்கிறேன். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்' என்று பதிவிட்டு வரலட்சுமி சரத்குமார் வெளியிட்டுள்ள இந்த டான்ஸ் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மனவருத்தம் நீங்காமலே மறைந்துவிட்டார் வாணி ஜெயராம் ; இசையமைப்பாளர் கோபி சுந்தர் வருத்தம்மனவருத்தம் நீங்காமலே ... நடிகர்களை தலைவர் என்று அழைப்பது நெருடலாக உள்ளது - வெற்றிமாறன் கருத்து நடிகர்களை தலைவர் என்று அழைப்பது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

vadivelu - thenkaasi,இந்தியா
08 பிப், 2023 - 15:48 Report Abuse
vadivelu அந்த குடும்ப ஆட்களை போல , கோயில் சீரமைப்புக்கு பதிலா மருத்துவ மனை கட்டலாமே, ஜீ எஸ் டி சிங்கப்பூரில் இல்லையே, வரி ஓவரா கீதே, பெட்ரோலை டுபாயில் ஓரணாவிற்கு விற்கறாங்க , கோயில்கள் என்ன ப்ராம்மணர்களுக்கு மட்டுமா என்றெல்லாம் எடுத்து விடுங்க.உங்க மார்க்கெட்ட கூடிடும்.சித்தார்த் போல ஆர்மி காரனாக எல்லாம் இடன்ஹியில் பேசறாங்க கேட்க ஆளில்லையே என்பதையும் சேர்த்துக்குங்க.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
06 பிப், 2023 - 05:11 Report Abuse
J.V. Iyer நீங்க மட்டும் இலவச சேலை, இலவச மது பாட்டில்கள்,வடை, டீக்கு டோக்கன் என்று அறிவியுங்கள், உங்களை எல்லா தமிழர்களும் எங்கே போனாலும் தொடர்வார்கள்.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06 பிப், 2023 - 01:21 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் வரு இஸ் மை ஃபேவரைட் ஆர்ட்டிஸ்ட். தாரை தப்பட்டை ஒரு ரகம் என்றால், சர்க்கார் மற்றும் சண்டைக்கோழி -2 இன்னொரு ரகம். ஆம்பளைங்க வீசினாத்தான் அருவா வெட்டுமா? பொம்பளைங்க வீசினாக்கூட வெட்டும்ன்னு ஒரு சுழற்று சுழற்றுவாரே.. விசிலடிக்காத குறை தான். Do what you like and do it to your best Varu. Luv you da.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in