2028 முதல் ஆஸ்கர் விருதுகளில் சேர்க்கப்படும் 'ஸ்டன்ட் டிசைன்' | லோகேஷ் கனகராஜ் 'டிரெண்ட்'-ஐ தொடரும் மற்ற இயக்குனர்கள் | 22 படங்களுடன் கெத்து காட்டும் ஓடிடி தளங்கள் | குட் பேட் அக்லி - முதல் நாள் வசூல் 50 கோடி கடக்குமா? | பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய் நடிக்கும் படம் விஜய் 67 என்கிற பெயரில் ஏற்கனவே படப்பிடிப்பு துவங்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த படத்தில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்கள் குறித்து அறிவிப்பும் வெளியானது. இதைத்தொடர்ந்து நேற்று இந்த படத்தின் துவக்க விழா பூஜை நடைபெற்றது. இதில் விஜய், படத்தின் நாயகி திரிஷா மற்றும் இன்னொரு நாயகியாக பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக கார்த்திக் சுப்பராஜ். இயக்குனர் புஷ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் நட்சத்திரமாக நடிக்கும் சிறுமி பங்கேற்று அனைவரையும் கவனம் ஈர்த்தார். இந்த குழந்தை யார் என சோசியல் மீடியாவில் தேடல் ஓடிக்கொண்டிருக்க, தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர மற்றும் காமெடி கதாபாத்திரங்களில் நடித்த நடிகர் அர்ஜுனன் என்பவரின் மகளான இயல் என்பவர்தான் இந்த சிறுமி என தெரியவந்துள்ளது.
இந்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு தனது மகள் இந்த படத்தில் நடிப்பது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் அர்ஜுனன், அதுமட்டுமல்ல இவர் தனது மகன் மற்றும் மகள் இயல் ஆகியோருடன் இணைந்து இன்ஸ்டாவில் நிறைய ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் இந்த சிறுமி நடிப்புக்கு ஒன்றும் புதியவரல்ல என்பதால் நிச்சயம் இந்த படத்தின் மூலம் இந்த ரசிகர்களை இன்னும் அதிகமாக கவர்வார் என எதிர்பார்க்கலாம்.