10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது | கில்லி மீண்டும் ரீ ரிலீஸ் ஆகிறது : மங்கத்தா சாதனையை முறியடிக்குமா? | இனி காமெடி படம் மட்டுமே...? இயக்குனர் பொன்ராம் முடிவு | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' | பூவே உனக்காக படம் பிரசாந்த் நடிக்க வேண்டியதா? | இயக்குனர் விஜய்க்கு மறுவாழ்வு தருமா 'காதல்' | இப்ப வருமோ…எப்ப வருமோ….'ஜனநாயகன்' | இயக்குனர்கள் அடிமையாக இருக்கக் கூடாது : புது நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ஆர்கே செல்வமணி பேச்சு | பா.ஜ., தலைவரின் பேச்சுக்கு திரிஷா கண்டனம் : வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன் |

டாப் ஹீரோக்களுக்கு வில்லன், குணசித்ரம், சிறப்பு தோற்றங்களில் நடித்து வரும் விஜய்சேதுபதி தற்போது மீண்டும் பக்கா ஆக்ஷன் படத்திற்கு வருகிறார். இந்த படத்தை விதார்த், பாரதிராஜா நடித்த குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் இயக்குகிறார். நட்டி நட்ராஜ், முனிஸ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் உட்பட பலர் நடிக்கின்றனர். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு அஜ்னீஸ் லோக்நாத் இசை அமைக்கிறார்.
பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் படம் பற்றி இயக்குநர் நித்திலன் கூறும்போது, “இது ஆக்ஷன் படம். இந்தப் படத்தில் சாதாரண மனிதனை அசாதாரணமான மனிதனாக மாற்றும் சமூகம் பற்றிய கதை. பழிவாங்கும் கதை என்றும் சொல்லலாம். வில்லனுக்கு கதையில் பெரிய முக்கியத்துவம் இருப்பதால் சில முன்னணி நடிகர்களுடன் பேசி வருகிறோம். சென்னையில் இன்று (பிப் 1)படப்பிடிப்பு தொடங்குகிறது. ஹீரோயின் முடிவாகவில்லை. பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்றார்.




