'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

ஹாலிவுட் சூப்பர் ஹீரோ படங்களுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் 2019ம் ஆண்டு புதிதாக வந்த சூப்பர் ஹீரோ ஷசாம். தற்போது அதன் தொடர்ச்சியாக வர இருக்கிறது. ஷசாம் : பியூரி ஆப் காட். சச்சேரி லீவி சூப்பர் ஹீரோ ஷசாமாக நடித்திருக்கிறார். அவருடன் அஷர் ஏஞ்சல், ஜாக் டியான் கிராசர், ரோச்சல் செக்லர், ஆடம் பரோடி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். டேவிட் எப்.சான்பெர்க் இயக்கி உள்ளார். டி.சி காமிக்ஸ் கேரக்டரான இதற்கு கென்டி கெய்டன், கிறிஸ் மோர்கன் திரைக்கதை எழுதி உள்ளனர்.
சூப்பர் ஹீரோ பேண்டசி கதையான இது விளையாட்டையும் மையமாக கொண்டது என்பதுதான் இதில் புதுமையான விஷயம். சூப்பர் ஹீரோவின் குழந்தைகளும், சூனியக்காரியின் குழந்தைகளும் மோதிக் கொள்வதுதான் கதை. அதனால் படத்தில் ஏகப்பட்ட சூப்பர் ஹீரோக்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவில் உள்ள நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா ஆகிய இடங்களில் உள்ள முக்கியமான ஸ்டேடியத்தில் இதன் படப்பிடிப்பு நடந்தது.
2 ஆண்டுகளாக நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு படம் தயாராகி விட்டது. வருகிற மார்ச் 17ம் தேதி அமெரிக்காவில் வெளியாகிறது. அதே தினத்தில் இந்தியாவில் ஆங்கிலம் தவிர இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகிறது.