'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தொலைக்காட்சி நகைச்சுவை நடிகரான புகழ், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமானார். இதன்மூலம் தொடர்ச்சியாக அவருக்கு பட வாய்ப்புகள் வருகின்றன. அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். இருப்பினும் தொலைக்காட்சியில் வொர்க்-அவுட்டான அவரது காமெடி சினிமாவில் வொர்க்-அவுட் ஆகவில்லை.
இந்நிலையில் புகழ் தான் நடிக்கும் புதிய படத்தின் கெட்டப் லுக் போஸ்டரை வெளியிட்டு, 'ஜனநாயகத்தை மீட்டெடுத்த அனைத்து போராளிகளுக்கும் 1947 திரைப்படம் சமர்ப்பணம்' என்று பதிவிட்டுள்ளார். அந்த போஸ்டர் லுக் தற்போது வைரலாகி வருகிறது.
சுதந்திர போராட்ட காலக்கட்டத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள 'ஆகஸ்ட்16,1947' திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தாயரிக்க என்.எஸ்.பொன்குமார் இயக்குகிறார். இந்த படத்தில் கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்க அவருடன் சேர்ந்து முக்கிய கதாபாத்திரத்தில் புகழ் நடித்து வருகிறார்.