என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? | தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை |
பிரின்ஸ் படத்தை அடுத்து மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அதிதி ஷங்கர் நாயகியாக நடிக்க, மிஷ்கின் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கும் இந்த படத்தின் இயக்குர் மடோன் அஸ்வினுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இதுவரை படமாக்கிய காட்சிகளை அப்படியே போட்டுவிட்டு, புதிதாக ஒரு கதையை தயார் செய்து அதை அவர்கள் படமாக்கப் போவதாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் பரவிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் மாவீரன் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் அது குறித்து ஒரு விளக்கம் அளித்துள்ளது. அதில், மாவீரன் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு புதிய கதை தயார் செய்யப்பட்டு வருவதாக வெளியான செய்தி முற்றிலும் வதந்தியாகும். இந்த படம் குறித்து அவதூறு பரப்ப வேண்டும் என்று யாரோ திட்டமிட்டு இது போன்ற வேலைகளை செய்து வருகிறார்கள். இந்த செய்திகளை யாரும் நம்ப வேண்டாம். மாவீரன் படத்தின் படப்பிடிப்பு எந்தவித பிரச்சினை இன்றி அமைதியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று கூறி உள்ளனர்.
மேலும், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கார்ட்டூனிஸ்ட்டாக நடிப்பதாகவும், அவர் வரையும் கார்ட்டூன்களே பின்னர் கதாபாத்திரங்களாக வந்து அவரை துரத்துவது போன்ற ஒரு கதையில் இப்படம் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.