நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை : அஜித் நெகிழ்ச்சி | ''எங்களுக்கு 'வாழ்க' சொன்னது போதும்! நீங்க எப்ப வாழப்போறீங்க...?'': துபாயில் அஜித் பேட்டி | என் குணம் இப்படி தான்... ஆசையை சொன்ன அதிதி ஷங்கர் | துருவ நட்சத்திரம் படத்திற்கு யாரும் உதவவில்லை: கவுதம் மேனன் வருத்தம் | வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்திய 'விடுதலை': சூரி நெகிழ்ச்சி | 'ஜெயம்' வேண்டாம்; ரவி போதும்: அறிக்கை வெளியிட்டு அறிவிப்பு | ராம் பொத்தினேனி படத்தில் மோகன்லால்? | மீண்டும் ரீ ரிலீஸ் ஆகும் பாட்ஷா! | ஜனவரி 17ல் தமிழில் வெளியாகும் பாலகிருஷ்ணாவின் 'டாக்கு மகாராஜ்' | முதல் நாள் வசூல்- வணங்கானை முந்திய விஷாலின் மதகஜராஜா! |
மலையாள திரையுலகில் ‛அங்கமாலி டைரிஸ்' என்கிற படத்தின் மூலம் இயக்குனராக புகழ் பெற்றவர் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி. தொடர்ந்து இ மா யு, ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த படங்களின் வெற்றியால் அடுத்ததாக மம்முட்டி தனது சொந்த தயாரிப்பில் தானே ஹீரோவாக நடிக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இன்னும் சில தினங்களில் மலையாளம் மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக மோகன்லால் நடிப்பில் மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார் லிஜோ ஜோஸ். இந்தநிலையில் நடிகர் சூர்யாவுக்காக ஒரு கதையை தான் உருவாக்கியுள்ளதாகவும் சூர்யாவிடம் அதை கூறியபோது அவருக்கும் ரொம்பவே பிடித்துப்போய் இந்த கதையை நாம் செய்வோம் என கூறியதாகவும் ஒரு தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் லிஜோ ஜோஸ். அதேசமயம் சூர்யாவின் கைவசம் ஏற்கனவே உள்ள படங்கள் மற்றும் சில காரணங்களால் இந்த படம் தள்ளிப்போய்க் கொண்டிருப்பதாகவும் நிச்சயமாக விரைவில் சூர்யாவிடமிருந்து அழைப்பு வரும் என நம்புவதாகவும் கூறியுள்ளார் லிஜோ ஜோஸ் பெள்ளிசேரி