ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
நெல்சன் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். அவருடன் கன்னட நடிகர் சிவராஜ் குமார், மலையாள நடிகர் மோகன்லால் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்த படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது. இந்த படத்தை அடுத்து தனது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் லால் சலாம் என்ற படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தில் ரஜினி ஒரு முஸ்லிம் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாட்ஷா படத்தில் மாணிக்கம் என்ற வேடத்தில் நடித்த ரஜினி ஒரு கட்டத்தில் தனது நண்பனின் பெயரை சேர்த்துக் கொண்டு மாணிக் பாட்ஷாவாக உருவெடுப்பார். இந்நிலையில் இந்த லால் சலாம் படத்தில் ரஜினி ஒரு முஸ்லிம் கதாபாத்திரத்திலேயே நடிப்பதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் பாட்ஷாவை தொடர்ந்து 28 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி முஸ்லிம் வேடத்தில் நடிக்க போகிறார்.