ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
என்.டி.பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்ஹா ரெட்டி படம் நேற்று வெளியானது. ஒரு நாள் முன்னதாக அதாவது நேற்று முன்தினம் உலகின் பல நாடுகளில் வெளியானது. இதை முன்னிட்டு ஆங்காங்கே உள்ள தெலுங்கு சினிமா ரசிகர்கள் சிறப்பு காட்சிகள் ஏற்பாடு செய்தனர்.
அந்த வகையில் அமெரிக்காவின் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள தியேட்டரில் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அந்த பகுதியில் ஆந்திர மக்கள் அதிகமாக வசிக்கிறார்கள். டிக்கெட்டுகள் பல நாட்களுக்கு முன்பேவிற்று தீர்ந்திருந்தது.
படம் வெளியான நாளில் தியேட்டர் முன் பல மணி நேரத்துக்கு முன்பாகவே ரசிகர்கள் கூடினர். படம் திரையிடத் தொடங்கியதும் பலாய்யா... பாலய்யா... கூச்சலிட்டபடி என்.டி.பாலகிருஷ்ணாவின் என்ட்ரி காட்சிக்கு ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து அவர்கள் கூச்சலிட்டபடியும் பேப்பர் துண்டுகளை திரையை நோக்கி வீடியபடியும் இருந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தியேட்டர் நிர்வாகம் படத்தை நிறுத்திவிட்டு போலீசுக்கு தகவல் கொடுத்தது. தியேட்டருக்கு வந்த போலீசார். “நீங்கள் இப்படி செய்வது எங்கள் நாட்டின் சட்டதிட்டத்துக்கு முரணானது. தொடர்ந்து உங்களை படம் பார்க்க அனுமதிக்க முடியாது. நீங்களாக வெளியேறுங்கள். இல்லாவிட்டால் வெளியேற்றுவோம்” என்று கூறினார்கள். இதை தொடர்ந்து ரசிகர்கள் அமைதியாக வெளியேறினார்கள்.
இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.