Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'துணிவு, வாரிசு' அதிகாலை காட்சிக் கட்டணம் 1000 ரூபாய்?

08 ஜன, 2023 - 18:10 IST
எழுத்தின் அளவு:
'Thunivu,-Varisu'-morning-show-ticket-price-1000-rupees?

2023 பொங்கலுக்கு அஜித்தின் 'துணிவு', விஜய்யின் 'வாரிசு' ஆகிய இரண்டு தமிழ்ப் படங்கள் மட்டுமே வெளியாக உள்ளன. இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் அதற்கான அதிகாலை சிறப்புக் காட்சிகளை நடத்துவதற்கான முன்பதிவு ஆரம்பமாகி உள்ளது.


'துணிவு' படத்திற்கு நடுஇரவு 1 மணிக்கும், 'வாரிசு' படத்திற்கு விடியற்காலை 4 மணிக்கும் காட்சிகளை நடத்துகிறார்கள். இரண்டு படங்களுக்குமான குறைந்தபட்சக் கட்டணம் 1000 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். 8 மணி காட்சிகளிலf இருந்துதான் அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களை வாங்க தியேட்டர்கள் முடிவு செய்துள்ளனர் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

'துணிவு' படத்தை திமுக அமைச்சர் உதயநிதி குடும்பத்திற்குச் சொந்தமான ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம்தான் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. 'வாரிசு' படத்தை சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு, கோவை ஆகிய ஏரியாக்களில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் வெளியிடுகிறது.

அமைச்சராகப் பொறுப்பேற்தற்கு முன்பு வரை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் என்ற பெயரில்தான் விளம்பரங்கள் வரும். அவர் அமைச்சராக ஆன பின்னும் அவர் கவனித்து வந்த நிறுவனம் சார்பில் முக்கிய படங்களை வாங்கி வெளியிடுகிறார்கள். அப்படியிருக்கும் போது இப்படி அநியாயத் தொகையாக 1000 ரூபாய் கட்டணம் வசூலிப்பதற்கு எப்படி அனுமதிக்கப்படுகிறது என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

சில தியேட்டர்களில் 2000, 3000 ரூபாய் கட்டணம் வாங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அப்படி வசூலிக்கும் தியேட்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதும் தெரியவில்லை.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
சூர்யா-42 படத்திற்கும் ‛வி' சென்டிமென்ட் டைட்டிலை கையில் எடுக்கும் சிறுத்தை சிவா!சூர்யா-42 படத்திற்கும் ‛வி' ... ஜனவரி 14க்குத் தள்ளிப் போன தெலுங்கு 'வாரிசு' ஜனவரி 14க்குத் தள்ளிப் போன தெலுங்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

rama adhavan - chennai,இந்தியா
09 ஜன, 2023 - 11:42 Report Abuse
rama adhavan இப்படி அதிகம் பணம் கொடுத்து பார்க்க வேண்டாம். படம் டப்பாக்கு சென்று விடும். கூடுதல் பணத்தை குடும்பத்திற்கும். ஏழைக்கும் தரலாம்.
Rate this:
vadivelu - thenkaasi,இந்தியா
09 ஜன, 2023 - 07:41 Report Abuse
vadivelu பெரிய நடிகர்கள் நாட்டின் விலைவாசி, பொருளாதாரம், வரி விதிக்கும் முறை, அந்நிய செலாவணி பற்றி எல்லாம் பேசவே கூடாது. ஒழுக்கம் அவர்களின் செயல்பாட்டில் இருக்கணும். கோடி கணக்கில் பணம் வாங்கும் அவர்கள் வரியை ஒழுங்காக கட்ட வேண்டும், சட்டத்தை மீறிய செயல்களில் ஈடுபட கூடாது. சிங்கப்பூரில் காலணாவுக்கு மருத்துவம் பார்க்கிறார்கள் என்று பீலா விட கூடாது. கோயிலுக்கு பதில் மருத்துவமனையை கட்டு என்று அரசுக்கு சொல்ல கூடாது.உங்கள் படம் பார்க்க இலவசமாக டிக்கக்கேடு கொடுங்க, அதன் பின் பேசுங்க, தினம் ஒரு நூறு பேருக்கு உணவு அளியுங்கள், அப்புறம் பேசுங்க.
Rate this:
Shiva - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09 ஜன, 2023 - 07:00 Report Abuse
Shiva முட்டாள்கள் இருக்கும் தமிழ்நாட்டில் இன்னும் எது வேணுமானாலும் நடத்தலாம் ….
Rate this:
09 ஜன, 2023 - 06:14 Report Abuse
அணில் ஆமை அவ்ளோ வெறி..,பாவம் ரசிக குஞ்சுகள்...கட் அவுட் வைக்க கடன் வாங்குறவனுக்கு ஆயிரம் எல்லாம் தூசி
Rate this:
09 ஜன, 2023 - 06:09 Report Abuse
V.Saminathan இதுல இந்த கொள்ளைக்கார நடிகனுக வந்து தமிழர்களுக்கு நலப்பணி செய்யப்போறானுபளாம்-தமிழனை அடிக்கணும்.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in