அரசு உடன் கைகோர்ப்போம் : கமல் பதிவு | சூதாட்டத்தின் பின்னணியில் உருவாகியுள்ள விஜய்சேதுபதி படம் | 18 வருடங்களுக்கு பிறகு விஜய் படத்தில் மீண்டும் இணைந்த யுகேந்திரன் | விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா புகைப்படங்கள் குறித்து வருத்தம் தெரிவித்த நானி | அனிமல் படத்தை புகழ்ந்து பதிவிட்டு உடனே நீக்கிய திரிஷா | மூன்று நாளில் ரூ.356 கோடி வசூல் செய்த அனிமல் | ரஜினி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு என்ன சர்ப்ரைஸ்! | யஷ் அடுத்த படத்தை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியானது | 50-வது படத்தை இயக்கி நடிக்கும் சிம்பு | ரச்சிதா - தினேஷ் பிரிவுக்கு காரணம் என்ன? |
'மதராசப்பட்டிணம்' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரிட்டிஷ் நடிகை எமி ஜாக்சன். அதன் பின் தமிழில் 'தாண்டவம், ஐ, கெத்து, தெறி, 2.0' உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.
எமி ஜாக்சன் 2019ம் ஆண்டு முதல் ஜார்ஜ் பனயட்டோவ் என்ற பிசினஸ்மேனைக் காதலித்து வந்தார். அந்தாண்டு செப்டம்பரில் ஒரு ஆண் குழந்தைக்கும் தாயானார் எமி. அவர்களது வாழ்க்கை இரண்டு ஆண்டுகள்தான் நீடித்தது. கடந்தாண்டு இருவரும் பிரிந்ததாகச் சொல்லப்பட்டது. சமூக வலைத்தளங்களில் ஜார்ஜ் உடன் நெருக்கமாக இருந்த அனைத்துப் புகைப்படங்களையும் நீக்கினார் எமி.
இந்நிலையில் தற்போது முதல் கணவரை விவாகரத்து செய்வதற்கான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறதாம். அந்த வழக்கில் கலந்து கொள்வதற்காக தற்போது அவர் நடித்து வரும் 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் சென்னை படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாமல் லண்டனிலியே உள்ளாராம். எமி தற்போது நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவரைக் காதலித்து வருகிறார்.