'லியோ' படத்திற்குப் பிறகு தவிக்கும் தியேட்டர்காரர்கள் | அமிதாப் குடும்பத்தின் அடுத்த வாரிசு… | த்ரிஷா, குஷ்பு, சிரஞ்சீவி மீது ஒரு கோடி நஷ்டஈடு கேட்டு மன்சூர் அலிகான் வழக்கு | நடிகர் டாக்டர் சீனிவாசனுக்கு பிடிவாரண்ட் | பாலிவுட் நடிகர் ஜூனியர் மெஹ்மூத் காலமானார் | 2023ல் ஹிந்தியில் 500 கோடி வசூல் படங்களைக் கொடுத்த தென்னிந்திய இயக்குனர்கள் | ‛முண்டாசுப்பட்டி' புகழ் நடிகர் ‛மதுரை' மோகன் காலமானார் | பழம்பெரும் நடிகை லீலாவதி காலமானார் | என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா |
மலையாள திரையுலகில் மிக பிரபலமான இயக்குனர் ஷாஜி கைலாஷ். சில ஆண்டுகளாக தமிழில் கவனம் செலுத்தியதால் மலையாள திரையுலகில் ஒரு பெரிய இடைவெளி அவருக்கு விழுந்துவிட்டது. ஆனாலும் அதை சரிசெய்யும் விதமாக இந்த வருடத்திலேயே பிரித்விராஜ் நடிப்பில் வெளியான கடுவா, சமீபத்தில் வெளியான காபா ஆகிய படங்களின் வெற்றி மூலம் மீண்டும் தனது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார் ஷாஜி கைலாஷ். இதைத்தொடர்ந்து மோகன்லாலை வைத்து அவர் இயக்கியுள்ள அலோன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது தனது அடுத்த படமான ஹன்ட் படத்தின் படப்பிடிப்பை துவக்கி உள்ளார் ஷாஜி கைலாஷ். இந்த படத்தில் கதாநாயகியாக பாவனா நடிக்கிறார். இதன் துவக்கவிழா பூஜை இன்று(டிச., 28) நடைபெற்றது. இந்த படத்தில் பாவனா டாக்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹாரர் திரில்லர் ஆக இந்த படம் உருவாக இருக்கிறது. சில ஆண்டுகளாக அதிக அளவில் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த பாவனா சில மாதங்களுக்கு முன்பு தான் என்டிக்காக்கொரு பிரேமதார்ணம் என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் தற்போது இந்த ஹன்ட் படத்தில் இணைந்துள்ளார் பாவனா.