நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கடந்த 2009ல் சசிகுமார் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான படம் பசங்க. தேசிய விருது பெற்ற இந்த படத்தில் இளம் சிறுவர்களாக கிஷோர், ஸ்ரீராம், பக்கோடா பாண்டி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். அதன்பிறகு இதே சிறுவர்கள் கோலிசோடா, கோலி சோடா-2 ஆகிய படங்களில் நடித்தனர். இதில் பசங்க கிஷோர் வஜ்ரம், நெடுஞ்சாலை, லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது சீரியல் நடிகையான பிரீத்தி குமாருடன் காதலில் விழுந்துள்ள கிஷோர் சமீபத்தில் அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தங்களது காதல் செய்தியை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வாழ்த்து செய்தியில் அவர் கூறும்போது, “அடுத்த வருடம் நாம் நம்முடைய பிறந்த நாள் மற்றும் அனைத்து விசேஷங்களையும் கணவன் மனைவியாக இணைந்து கொண்டாடுவோம்” என்று குறிப்பிட்டு அடுத்த வருடத்திற்குள் தாங்கள் திருமணம் செய்துகொள்ள இருப்பதையும் உறுதிப்படுத்தி உள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்கிற சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் தான் பிரீத்தி குமார். அதைத்தொடர்ந்து லட்சுமி கல்யாணம், கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, வானத்தைப்போல உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வருகிறார் பிரீத்தி குமார்.