‛‛நாங்கள் பரம எதிரிகள் கிடையாது. ஆனால்...'': தனுஷ் பற்றி மனம்திறந்த நயன்தாரா | 5 மொழிகளில் வெளியாகும் அய்யப்பன் படம் | பிளாஷ்பேக் : மோகனை முழுமையான ஹீரோவாக்கிய 'கிளிஞ்சல்கள்' | சீரியல் நடிகை கீதாஞ்சலிக்கு ஆண் குழந்தை! குவியும் வாழ்த்துகள் | புஷ்பா 2 - தமிழகத்தில் 50 கோடி வசூல் | தன் மீதான வழக்கை ரத்து செய்ய அல்லு அர்ஜுன் மனு | பிளாஷ்பேக் : அன்புள்ள ரஜினிகாந்த் | திரைப்பட கூட்டமைப்பின் துணை தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு | சீனு ராமசாமி மனைவியை பிரிவதாக அறிவிப்பு | சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் - சாய் பல்லவி கோபம் |
90களில் முன்னணி ஹீரோவாக கோலோச்சிய அர்ஜூன், சரத்குமார் போன்றவர்கள் தற்போது தங்களை குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களுக்கு மாற்றிக்கொண்டு பிஸியான நடிகர்களாக வலம் வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையராக ஐஸ்வர்யா ராயுடன் ஜோடி சேர்ந்து நடித்து இருந்தார் சரத்குமார். அடுத்ததாக வெளியாக உள்ள விஜய்யின் வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிக்கும் அவரது 108வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார் சரத்குமார்.
இந்த படத்தை பிரபல இயக்குனர் அனில் ரவிபுடி இயக்குகிறார். இந்த படத்தில் தற்போது சரத்குமார் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள கதாபாத்திரம் அவர் நடித்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும் என்று படக்குழுவினர் அனைவரும் ஒருசேர விரும்பியதால் சரத்குமாரை அழைத்து இதில் ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். பாலகிருஷ்ணா தற்போது கோபிசந்த் மாலினேனி டைரக்சனில் நடித்துள்ள வீர சிம்ஹா ரெட்டி திரைப்படமும், சரத்குமார் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் வரும் சங்கராந்தி பண்டிகையில் ஒன்றாக ரிலீசாக இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.