மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் |
மருது மோகன் என்பவர் சிவாஜியின் சினிமா குறித்து ஆய்வு செய்து நூல் எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் இளையராஜா, பாரதிராஜா, ராம்குமார், பிரபு மற்றும் விக்ரம் பிரபு, கே.பாக்யராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் இளையராஜா பேசியதாவது: எங்கள் ஊர் பண்ணைபுரத்தில் ஒரு நாடக தியேட்டர் இருந்தது. அந்த தியேட்டருக்கு தங்கபதுமை பட வெளியீட்டின்போது வந்திருந்தார் சிவாஜி. அவருக்கு என் அண்ணன் பாஸ்கர் மைக் செட் வைத்து கொடுத்தார். அப்போது அவர் சிவாஜியை தொட்டுப் பார்த்தார். அன்று முதல் 3 நாள் காய்ச்சல் அவருக்கு. அப்படி நாங்கள் வியந்து பார்த்த சிவாஜியோடு நாங்கள் இணைந்து பணியாற்றியது எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம்.
என்னை அவர் ராசா என்று அன்போடு அழைப்பார். முதல் மரியாதை படத்தில் அவரை பாடவைத்து அந்த புண்ணியத்தையும் சேர்த்துக் கொண்டேன். சாதனை படத்தில் அவர் நடித்த காட்சியில் நானும் இருந்தது என் பாக்கியம்.
சிவாஜிக்கு அவர் சிவாஜி வேடத்தில் குதிரையில் இருக்கும் சிலை ஒன்றை பரிசாக வழங்க எஸ்.பி.முத்துராமன் நிதி திரட்டினார். என்னிடம் வந்து ரஜினி இவ்வளவு கொடுத்தார், கமல் இவ்வளவு கொடுத்தார், நீங்கள் எவ்வளவு தருகிறீர்கள் என்று கேட்டார். நான் அதற்கு மொத்தம் எவ்வளவு செலவாகும் என்று கேட்டேன். அவர் அந்த தொகையை சொன்னார். அதை நான் தந்து விடுகிறேன் என்று சொல்லி கொடுத்தேன்.
இன்று நடிகர்கள் சாப்பிடும் உணவில் சிவாஜியின் பெயர் இருக்கிறது. சிவாஜிக்கு கொடுக்கும் பரிசில் எவர் பெயரும் இருக்க கூடாது என்று நானே கொடுத்தேன். இதுவரை நான் இந்த தகவலை சொன்னதும் இல்லை. இதை தம்பட்டம் அடிப்பதற்காக சொல்லவில்லை. அவரை அவ்வளவு தூரம் நான் நேசித்தேன் என்பதற்காகவே இதை சொல்கிறேன். சிவாஜிக்கு திரையுலகமும், அரசுகளும் எதுவும் செய்யவில்லை. அவருக்கு செய்தது இந்த இளையராஜா மட்டும் தான்.
இவ்வாறு அவர் பேசினார்.