ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பதவியேற்ற பின் அவர் ஆரம்பித்த திரைப்படத் தயாரிப்பு மற்றும் வினியோக நிறுவனமான ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடும் படங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. 2023 பொங்கலுக்கு அஜித் நடிக்கும் 'துணிவு' படத்தை மொத்த தமிழக வினியோக உரிமையையும் அந்த நிறுவனம் வாங்கியது.
அதே பொங்கலுக்கு விஜய் நடித்துள்ள 'வாரிசு' படத்தின் தமிழக வினியோக உரிமையை விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தைத் தயாரித்த, அடுத்து விஜய்யின் 67வது படத்தைத் தயாரிக்க உள்ள செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் வாங்கியது. இருப்பினும் அந்நிறுவனத்திடமிருந்து சில முக்கிய ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கும் என்ற பேச்சு கோலிவுட்டில் இருந்தது.
இந்நிலையில் இன்று(டிச., 17) 'வாரிசு' படத்தின் தமிழக வினியோகஸ்தர்கள் யார் யார் என்பதை ஏரியா வாரியாக செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி முக்கிய ஏரியாக்களான சென்னை, செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென்னாற்காடு, கோவை ஆகிய ஏரியாக்களின் உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. தமிழகத்தில் இந்த ஏரியாக்களில்தான் தியேட்டர்கள் அதிகம்.
கடந்த சில வாரங்களாக 'வாரிசு, துணிவு' இடையேயான போட்டியில் இந்த வினியோக விஷயமும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 'துணிவு' படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் முன்னரே வாங்கிவிட்டதால், 'வாரிசு' படத்தை 5 முக்கிய ஏரியாக்களில் மட்டும் வளைத்துப் போட்டிருக்கிறது என்று கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.
'துணிவு' படத்தை ரெட் ஜெயன்ட் வெளியிடுவதால் 'வாரிசு' படத்திற்கு அதிகத் தியேட்டர்கள் கிடைக்க வாய்ப்பில்லை என அதன் தயாரிப்பாளர் தில் ராஜு ஒரு பேட்டியில் பேசியுள்ள நிலையில் இப்போது 5 ஏரியாக்களை ரெட் ஜெயன்ட் வாங்கியுள்ளது ரசிகர்களிடத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'வாரிசு, துணிவு' இரண்டு படங்களும் சமமான அளவில் தியேட்டர்களில் வெளியாகும் என்று தெரிகிறது.