''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் கோல்டன் குளோப் விருதுக்கு போட்டியிடுவதால் மகிழ்ச்சியில் இருக்கிறார். அதோடு உலகம் முழுக்க சுற்றுப் பயணம் செய்து இந்திய படங்கள் குறித்து பேசி வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் பாலிவுட் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைவது ஏன் என்ற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது.
அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு: பாலிவுட் சினிமாவுக்குள் கார்ப்பரேட் நிறுவனங்கள் வர ஆரம்பித்ததும், நடிகர்களுக்கும் இயக்குநர்களுக்கும் அதிக சம்பளம் தரப்படுகிறது. இதனால் அவர்களுக்கு வெற்றிபெற வேண்டும் என்ற பசி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டது. இந்த ஆண்டு பாலிவுட்டில் ஒரு சில படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸ் வெற்றிபெற்றன. ஆனால் முக்கிய நடிகர்கள் நடித்த படங்கள் தோல்வியைத் தழுவின.
பார்வையாளர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டு இயங்குவதே வெற்றிக்கான ஒரே மந்திரம். தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை இந்த ஆண்டு நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. இதேபோன்ற சூழல் பாலிவுட் திரையுலகுக்கு வேண்டும் என்றால் அவர்கள் சற்று அதிகமாக நீந்த வேண்டும். இல்லையென்றால் மூழ்கிவிடுவார்கள்.
ராஜமவுலியன் இந்த வெளிப்படையான கருத்து பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.