ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர், ஆலியாபட் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த படம் ‛ஆர்ஆர்ஆர்'. தற்போது இந்த படம் ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது. ஆரம்பத்தில் தடுமாறிய ஆர்ஆர்ஆர் தொடர்ந்து மெல்ல பிக்கப் ஆகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளதாம்.
அந்தவகையில் ஜப்பான் பாக்ஸ் ஆபிஸில் இப்போது வரை இப்படம் 410 மில்லியன் யென் வசூலித்து இருக்கிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.24.85 கோடி. இது குறித்த தகவலை ஆர்ஆர்ஆர் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜப்பானில் வெளியான இந்திய படங்களில் ஆர்ஆர்ஆர் பட வசூல் புதிய சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான முத்து படம் தான் ஜப்பானில் ரூ.22 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து இருந்தது. தற்போது அந்த சாதனையை ஆர்ஆர்ஆர் படம் முறியடித்துள்ளது.