பிப்ரவரி முதல் கல்கி 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் | திரிஷ்யம் 3 ரிலீஸ் எப்போது : இயக்குனர் தகவல் | ரன்வீர் சிங் ஜோடியாக பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | சமந்தாவின் மா இண்டி பங்காரம் படத்தின் டீசர் ஜனவரி 9ல் ரிலீஸ் | ரேஸின் போது அஜித்தை சந்தித்தது ஏன் : ஸ்ரீலீலா பதில் | ரிலீஸ் அறிவிக்கப்பட்ட தேதியில் தீர்ப்பு; 'ஜனநாயகன்' ஜன.9ல் வெளியாகுமா? | சீமான் இயக்கத்தில் மாதவன் நடித்த தம்பி ரீ ரிலீஸ் ஆகிறது | 22 வருடங்களுக்கு முன்பு தான் நடித்த கதாபாத்திரத்தில் இப்போது கேமியோவாக நடிக்கும் மம்முட்டி | கடைசியாக நடித்த படத்தில் நள்ளிரவு 2 மணிக்கு நடனமாடிய தர்மேந்திரா | இங்கு மட்டுமல்ல சவுதியிலும் 'ஜனநாயகன்' வெளியாவதில் சென்சார் சிக்கல் |

யுவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் படம் ஓ மை கோஸ்ட். ராணி மற்றும் பேய் என இரண்டு விதமான கேரக்டரில் சன்னி லியோன் நடித்துள்ளார். அவருடன் சதீஷ், தர்ஷா குப்தா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. படப்பிடிப்பு முடிந்து சில மாதங்களாக கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஓ மை கோஸ்ட் படம் வருகிற டிசம்பர் 30ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் திரிஷா நடித்துள்ள ராங்கி, விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன், பிரபு சாலமன் இயக்கியுள்ள செம்பி போன்ற படங்களும் திரைக்கு வருகின்றன.