மீண்டும் ஹிந்தி படத்தில் கீர்த்தி சுரேஷ்? | ஆகஸ்ட் 14ல் ரஜினியின் கூலி திரைக்கு வருகிறது? | சிம்புவிற்கு ஜோடியாகும் கயாடு லோகர் | நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் படத்தில் இணைந்த நிழல்கள் ரவி | கார்த்தி சுப்பராஜ் பிறந்தநாள் : ரெட்ரோ படத்தின் 55 வினாடி மேக்கிங் வீடியோ வெளியீடு | இளையராஜாவிற்கு தங்கச்சங்கிலி அணிவித்து வாழ்த்திய சிவகுமார் | ரவி அரசு இயக்கத்தில் விஷால்? | 'கொய்யா' விற்ற பெண் பற்றி பிரியங்கா சோப்ரா பெருமிதம் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு | சச்சினுக்கு முன்பு ரீ ரிலீஸ் ஆகும் பகவதி |
முதல்வர் ஸ்டாலினின் மகனும், எம்எல்ஏ.வுமான உதயநிதி நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக சுபமுகூர்த்த நன்னாளில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இசையமைப்பாளர் இளையராஜாவும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஆடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது : ‛‛வணக்கம், நான் இளையராஜா. அமைச்சர் உதயநிதி அவர்களே நீங்கள் பதவி ஏற்கும் நாளில் நான் வாழ்த்துவது எனக்கு மகிழ்ச்சியை தந்தது.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
என்று வள்ளுவர் சொன்னதை போன்று உங்க அம்மாவுக்கு தான் மகிழ்ச்சியாக இருக்கும். அதைத்தான் வள்ளுவர் அழகாய் சொல்லியிருக்கிறார்.
இந்த அமைச்சர் பதவியை நீங்கள் நல்ல முறையில் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அரசியல் களத்தில் இறங்கிவிட்டீர்கள். அதிலும் அமைச்சர் பதவி ஏற்கும் போது பொறுப்பு அதிகமாகிறது. இந்த பொறுப்பை சரிவர நிறைவேற்றி, மக்களிடம் நல்ல பெயரும், புகழும் அடைய வேண்டும் என்பது எனது விருப்பம். கண்டிப்பாக நிறைவேற்றுவீர்கள் என நான் நம்புகிறேன்''.
இவ்வாறு இளையராஜா தெரிவித்துள்ளார்.