ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009ல் வெளிவந்து உலக அளவில் பெரும் வரவேற்பையும், வசூலையும் குவித்த ஹாலிவுட் படம் 'அவதார்'. அப்படத்தின் இரண்டாம் பாகம், 'அவதார் - த வே ஆப் வாட்டர்' இந்த வாரம் டிசம்பர் 16ம் தேதி இந்தியாவிலும் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய ஆறு மொழிகளில் வெளியாக உள்ளது.
தமிழகத்தில் பெரும்பாலான தியேட்டர்கள் 'அவதார் 2' படத்தை வெளியிடுகின்றன. தமிழின் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்குத்தான் அதிகாலை 4 மணி சிறப்புக் காட்சிகள் நடக்கும். அது போல 'அவதார் 2' படத்திற்கும் அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகள் நடக்கின்றன. அவற்றிற்கான முன்பதிவும், மற்ற காட்சிகள், நாட்களுக்கான முன்பதிவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 'அவதார் 2' படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டுவார்கள். எனவே, அப்படம் வெளியாகும் நாளில் முக்கிய தமிழ்ப் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. 'கட்சிக்காரன், 181' என்ற இரண்டு சிறிய பட்ஜெட் படங்கள் மட்டுமே டிசம்பர் 16ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
'அவதார் 2' படம் நன்றாக இருந்து, ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுவிட்டால் அடுத்த வாரம் டிசம்பர் 23ம் தேதியும் அதிகப் படங்கள் வர வாய்ப்பிருக்காது. டிசம்பர் 22ம் தேதி விஷால் நடிக்கும் 'லத்தி' படம் வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 'அவதார் 2' வரவேற்பைப் பொறுத்து மற்ற படங்களின் வெளியீடுகள் அறிவிக்கப்படலாம்.