'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடித்துள்ள 'வாரிசு', அஜித் நடித்துள்ள 'துணிவு' ஆகிய இரண்டு படங்களும் போட்டியிட உள்ளன. அந்த வெளியீட்டுப் போட்டிக்கு முன்னதாகவே பாடல்கள் மூலம் இப்போது போட்டி ஆரம்பமாகியுள்ளது.
'வாரிசு' படத்தின் முதல் சிங்கிள் 'ரஞ்சிதமே' ஒரு மாதத்திற்கு முன்பு வெளிவந்து 90 மில்லியன் பார்வைகளை யு டியூபில் கடந்து ஹிட் லிஸ்ட்டில் இடம் பிடித்துவிட்டது. அதற்கடுத்து இரண்டாவது சிங்கிளான 'தீ தளபதி..' பாடல் ஒரு வாரம் முன்னதாக வெளியாகி 20 மில்லியன் பார்வைகளைக் கடந்து அதுவும் ஹிட் லிஸ்ட்டில் இடம் பிடித்துவிட்டது. யு டியூப் மியூசிக் டிரென்டிங்கில் இப்பாடல் தற்போது 2ம் இடத்தில் உள்ளது.
அதே சமயம், அஜித் நடித்துள்ள 'துணிவு' படத்தின் முதல் சிங்கிளாக இரண்டு தினங்களுக்கு முன்பு வெளிவந்த 'சில்லா சில்லா' பாடல் 13 மில்லியன் பார்வைகளைக் கடந்து யு டியூப் மியூசிக் டிரென்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 'தீ தளபதி, சில்லா சில்லா' பாடல்களுக்கிடையே தற்போது கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. 'வாரிசு' பாடல்களின் சாதனையை 'துணிவு' பாடல்கள் மிஞ்சுமா என்று இரண்டு ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.
பாடல்களை விடவும், இரண்டு படங்களின் டீசர் அல்லது டிரைலர் வெளியாகும் போது இந்தப் போட்டி இன்னும் அதிகமாகவே இருக்கும்.