''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
கடந்த 2002ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த், மனிஷா கொய்ராலா, கவுண்டமணி உள்பட பலரது நடிப்பில் வெளியான பாபா படம் டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு மாற்றப்பட்டு இன்றைய தினம் உலகம் எங்கும் திரையிப்பட்டுள்ளது. அதோடு பல இடங்களில் அதிகாலை 4 மணிக்கே காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளன.
தற்போது தமிழகத்தில் மாண்டஸ் புயல் அச்சுறுத்தல் இருந்தபோதும் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் ரஜினி ரசிகர்கள் இன்று அதிகாலையிலேயே தியேட்டர்கள் முன்பு கூடி பட்டாசு வெடித்து தாரை தப்பட்டம் முழங்க, பாபா படத்திற்கு அமோக வரவேற்பு கொடுத்துள்ளனர். ஏற்கனவே திரைக்கு வந்த படமாக பாபா இருந்த போதும் புதிய படங்களுக்கு கொடுப்பது போன்ற வரவேற்பை ரஜினி ரசிகர்கள் கொடுத்துள்ளனர்.
இதேபோல் 2007ஆம் ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த பிளாக்பஸ்டர் ஹிட் படமான சிவாஜி படமும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகி உள்ள சிவாஜி படம் டிசம்பர் 15ம் தேதி வரை திரையிடப்படுகிறது. ஒரேசமயத்தில் ரஜினியின் இரண்டு படங்கள் வெளியாகி உள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.