போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

நந்தா, பிதாமகன் படங்களை தொடர்ந்து மீண்டும் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வந்தார் சூர்யா. ஆனால் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் கதையில் தனக்கு போதுமான திருப்தி இல்லாததால் இப்போது அந்த படத்தில் இருந்து அவர் விலகி இருக்கிறார்.
இந்த நிலையில் வணங்கான் படத்திற்கு கொடுத்திருந்த அதே கால்ஷீட் தற்போது இயக்குனர் ஹரிக்கு கொடுத்திருக்கிறார் சூர்யா. அவர்கள் மீண்டும் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஹரி இயக்கத்தில் ஆறு, வேல், சிங்கம் படத்தின் மூன்று பாகங்களில் நடித்துள்ள சூர்யா, அதன்பிறகு அருவா என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது. பின்னர் அந்த படம் டிராப் ஆன நிலையில் தற்போது மீண்டும் அந்த படத்தில் நடிக்க கால்சீட் கொடுத்திருக்கிறாராம் சூர்யா. இதன் காரணமாக அருவா படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
அதோடு சூர்யா இரண்டு வேடங்களில் நடிக்கும் அருவா படத்தின் நாயகியாக முதலில் ராசி கண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், தற்போது பூஜா ஹெக்டே இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் அருவா படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக உள்ளது.