ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி காதல் படத்தின் மூலம் புகழ் பெற்ற பரத் நடித்திருக்கும் 50 வது படம் லவ். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக வாணிபோஜன் நடித்திருக்கிறார். இருவரும் இணைந்து நடித்த மிரள் படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்த படத்தை ஆர்.எஸ்.பாலா இயக்கி உள்ளார். கே.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார், ரோனி ரெபோல் இசை அமைத்துள்ளார்.
இளம் கணவன், மனைவிக்கு இடையே நடக்கும் ஊடலும், காதலும்தான் படம். இதுகுறித்து வாணிபோஜன் கூறியதாவது: காதலித்து திருமணம் செய்தால் மட்டும் போதாது, திருமணத்திற்கு பிறகும் காதலிக்க வேண்டும், ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள வேண்டும், விட்டுக் கொடுக்க வேண்டும் என்று சொல்கிற படம்தான் லவ். என்றார்.
விவாகரத்துகள் அதிகம் நடப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த வாணி போஜன் “விவாகரத்துகள் அதிகரித்திருப்பது வருத்தம் தருகிறது. சரியான புரிதல் இல்லாமல் போனது, சுயசார்பும், சுதந்திரமும் தற்போது இருப்பதால் சுயநலமும் அதிகரித்து விட்டது. காதல் என்பது புரிதலிலும், விட்டுக் கொடுத்தலிலும்தான் இருக்கிறது. காதல் அவ்வளவு எளிதானதல்ல. முதலில் குடும்பத்தை காதலிக்க வேண்டும், உறவுகளை காதலிக்க வேண்டும். என்கிறார் வாணி போஜன்.




