இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
ஹாலிவுட், பாலிவுட் போன்று தமிழிலும் இசை ஆல்பங்கள் தனி கவனம் பெற்று வருகிறது. இந்த ஆல்பங்கள் யு டியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து வருமானமும் கிடைக்கிறது.
முதன் முறையாக ஐயப்பன் பக்தி வீடியோ ஆல்பம் ஒன்று ஆருயிர் ஐயப்பா என்ற பெயரில் தயாராகி வருகிறது. தமிழில் எத்தனையோ ஐயப்பன் பற்றிய பக்திப் பாடல்கள் வந்துள்ளன. ஆனால் முதல் முறையாக சினிமாடிக் ஐயப்பன் பாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை ஸ்ரீ விஷ்ணு தயாரித்து இயக்கியுள்ளதோடு நடித்தும் இருக்கிறார். வசந்த் பாடலை எழுதியுள்ளார். போடா போடி, பாரிஜாதம் உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்துள்ள தரண் இந்த பாடலுக்கு இசை அமைத்துள்ளார். சூப்பர் சிங்கர் புகழ் சாம் விஷால் மற்றும் முத்துச்சிற்பி இருவரும் பாடியுள்ளதோடு நடித்தும் உள்ளனர்.
“முழுக்க முழுக்க காட்சி வடிவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ பாடல் பார்ப்பவர்களை நிச்சயம் பரவசப்படுத்தும் என்பதில் ஐயமில்லை” என்கிறார் இயக்குனர் ஸ்ரீ விஷ்ணு.