பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
15வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா வருகிற ஜனவரி மாதம் 6ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரை நடக்கிறது. இந்த விழாவில் திரையிட சீனு ராமசாமியின் 'மாமனிதன்', கார்த்திக் சுவாமிநாதனின் 'முகிழ்', ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் 'இரவின் நிழல்', கவுதம் ராமச்சந்திரனின் 'கார்கி', மற்றும் எம் பத்மகுமாரின் 'விசித்திரன்' ஆகிய படங்கள் திரையிடப்படுகிறது.
இதை தவிர சஞ்சீவ் ஹசாரிகா இயக்கத்தில் ரினிகி புயன் சர்மா தயாரித்த அசாமிய திரைப்படமான 'போகுல் புலோர் டோரே', சிதம்பர பழனியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள மலையாளப் படம் 'தி ஒன் அண்ட் தி மெனி வித்தின்', சௌம்யாஜித் மஜும்தாரின் பெங்காலி படம் 'ஹோம்கமிங்', கிரீஷ் மோஹிதேவின் மராத்தி படம் 'தாத் கானா', ஜோஷி மேத்யூவின் 'நெஸ்ட் ஆஃப் சோரோஸ்' மலையாளப் படம், ஷெர்ரி மற்றும் தீபேஷ் டியின் மலையாளப் படம் 'அவனோவிலோனா' மற்றும் இஷான் கோஸின் பெங்காலி படம் 'ஜில்லி' ஆகியவையும் திரையிடப்படுகிறது.
ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா நிர்வாகிகள் சென்னையில் நடந்த விழாவில் கலந்து கொண்ட பிரச்சார சுடர் நிகழ்ச்சி நடந்தது. அதில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. பார்த்திபன், சீனு ராமசாமி, ஆர்.கே.சுரேஷ், கங்கை அமரன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.