நிஜ சிங்கத்துடன் நடித்த ஷ்ரிதா ராவ் | மோகன்லால், பகத் பாசிலை பின்னுக்குத் தள்ளி கல்யாணி பிரியதர்ஷன் | 2025 : 8 மாதங்களில் 175 படங்கள் ரிலீஸ்... அதிர்ச்சி தரும் ரிசல்ட் | அனுஷ்கா வராதது அவர் விருப்பம் : இயக்குனர் கிரிஷ் பதில் | தெலுங்கு சினிமாவில் 1000 கோடி வசூல் : காரணம் சொல்லும் சிவகார்த்திகேயன் | அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? | மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை | பார்த்திபன் இயக்கும் படத்தில் ‛லப்பர் பந்து' ஹீரோயின் | காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? |
இயக்குனர் வம்ஷி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனா விஜய்யுடன் முதன் முறையாக இணைந்துள்ளார்.
தில் ராஜு தயாரிக்கும் இந்தப் படத்தில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷ்யாம், யோகி பாபு, சங்கீதா, குஷ்பு, சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் பாடிய இந்தப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' பாடல் வெளியாகி ஹிட்டானது. இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெறும் ‛தீ தளபதி' எனும் பாடலை சிம்பு பாடியுள்ளார். இந்த பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர் .மேலும் சிம்புவுடன் இசைஅமைப்பாளர் தமன் மற்றும் இயக்குனர் வம்சி எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது . தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் வாரிசுத் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.