குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் | 7 ஆண்டுகளுக்கு பின் அதர்வா நடித்த கணிதன் டிவியில் ஒளிபரப்பு | சாருகேசி: திரைப்படமாகும் நாடகம் |
தி பீப்பிள் மீடியா பேக்டரி சார்பாக டி.ஜி.விஷ்வபிரசாத், விவேக் குச்சிபோட்லா தயாரித்துள்ள படம் விட்னஸ். ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரோகிணி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களாக நடிக்க, அழகம்பெருமாள், சண்முகராஜா, ஜி. செல்வா, சுபத்ரா ராபர்ட், இராஜீவ் ஆனந்த் மற்றும் எம்.ஏ.கே.ராம் உள்பட பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் தீபக் இயக்கி இருக்கிறார். அவரே ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
இயக்குனர் தீபக் கூறியதாவது: தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம். பெருநகரங்கள் குறித்து நாம் இதுவரை கண்டிராத உண்மைகளையும், கண்ணுக்குப் புலப்படாத வகையில் அங்கே செயல்படும் அதிகார மையங்களையும் நமக்கு நெருக்கமாக கொண்டு வந்து சேர்க்கும் வகையில் உருவாகி இருக்கிறது. வருகிற 9ம் தேதி சோனி ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது. என்றார்.