பூல் சக் மாப் : 60 கோடி நஷ்டஈடு கேட்டு பிவிஆர் ஐநாக்ஸ் வழக்கு | வியாபார நிலையில் முன்னேறிய சூரி | எங்கள் தங்கம், சூர்யவம்சம், மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து |
கடந்த வருடம் மலையாளத்தில் சூப்பர்மேன் கதையம்சத்துடன் வெளியான படம் மின்னல் முரளி. இந்த படத்தை இயக்கியவர் பசில் ஜோசப். இந்த படத்தில் கிராமத்தில் இருக்கும் நாயகன் டொவினோ தாமஸ் மற்றும் வில்லன் குரு சோமசுந்தரம் இருவருக்கும் ஒரே நேரத்தில் சூப்பர்மேன் பவர் கிடைக்கிறது என்றும். அதை அவரவர் குணாதிசயத்திற்கு ஏற்ப எப்படி பயன்படுத்துகின்றனர் என்பதையும் மையப்படுத்தி வித்தியாசமான படமாக கொடுத்திருந்தார் பசில் ஜோசப். இவரது இந்த படம் பாலிவுட்டில் உள்ள பிரபல இயக்குனர்கள் வரை பாராட்டு பெற்றது.
இவர் ஒரு நடிகரும் என்பதால், மின்னல் முரளியை தொடர்ந்து அடுத்த படம் இயக்காமல் தற்போது தான் நடிக்க ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஜெய ஜெய ஜெய ஹே என்கிற படம் சிறிய பட்ஜெட்டில் வெளியாகி 33 நாட்களில் சுமார் 42 கோடி வசூலித்துள்ளது. இந்த வெற்றியால் தொடர்ந்து இவரை ஹீரோவாக நடிக்கும்படி பல வாய்ப்புகள் தேடி வருகின்றன. ஆனால் ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்ட சில படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு மீண்டும் டைரக்ஷனில் கவனம் செலுத்த விரும்புவதாக கூறியுள்ளார் பசில் ஜோசப். அடுத்ததாக பகத் பாசில் நடிக்கவிருக்கும் படத்தை இயக்க உள்ளார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. வரும் ஏப்ரல் 2023க்குள் தனது நடிப்பு வேலைகளையும் இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளையும் முடித்து விடுவேன் என்று கூறியுள்ளார் பசில் ஜோசப்.