கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
நடிகர் கார்த்திக் ராஜ் 'செம்பருத்தி' சீரியலுக்கு பிறகு 'கார்த்திகை தீபம்' என்கிற புதிய தொடரின் மூலம் மீண்டும் ஜீ தமிழில் என்ட்ரி கொடுத்துள்ளார். அந்த தொடரின் புரோமோவானது சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. குறிப்பாக சீரியலின் கதாநாயகி யார்? எங்கிருந்து வருகிறார்? என பலரும் இணையத்தை துலாவி வருகின்றனர்.
கேரளாவை சேர்ந்தவரான ஹர்த்திகா முதன் முதலில் மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு கார்த்திக் ராஜூடன் இணைந்து ப்ளாக் அண்ட் வொயிட் படத்தில் நடித்திருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'மாரி' சீரியலுக்காகவும் ஆடிஷனை செய்துள்ளார். ஆனால், அவருக்கு அப்போது வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது அதே சேனலில் ப்ரைம் டைம் சீரியலில் அதுவும் கார்த்திக் ராஜூக்கு ஹீரோயினாக கமிட்டாகியிருக்கிறார். முன்னதாக செம்பருத்தி சீரியலில் கார்த்திக் ராஜ் - ஷபானா கெமிஸ்ட்ரி அந்த சீரியலின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்தது.
இந்நிலையில் ஹர்த்திகா, கார்த்திக் ராஜூடன் ஏற்கனவே இணைந்து நடித்திருப்பதால் இந்த காம்போ மீது அதிக எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆர்த்திகாவுக்கு தமிழ் சின்னத்திரை சக்சஸை கொடுக்குமா? கார்த்திக் ராஜ் - ஆர்த்திகா கெமிஸ்ட்ரி வொர்க்-அவுட் ஆகுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
கருப்பு நிற பெண்ணான தீபாவின் வாழ்க்கையை மையமாகிக் கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. அழகாக பாடும் திறமை இருந்தால் தன்னுடைய நிறத்தால் தீபா தொடர்ந்து சமுதாயத்தால் நிராகரிக்கப்பட்டு வருகிறார். திடீரென எதிர்பாராத சூழ்நிலையில் இவர் மிகப்பெரிய நிறுவனத்தின் சிஇஓ கார்த்திக்கை திருமணம் செய்ய அதன் பிறகு அவளது வாழ்க்கை என்னவாகிறது? கருப்பை பிடிக்காத கார்த்தியின் மனதை வெல்வாளா? அவளது வாழ்க்கையின் கனவு நனவாகுமா? என்பதுதான் சீரியல் கதைக்களம் என தெரிய வந்துள்ளது.
இந்த சீரியல் வரும் டிசம்பர் 5ம் தேதி முதல் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. கார்த்திகேயா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடிக்க தீபா இந்த கதாபாத்திரத்தில் ஹர்த்திகா என்பவர் நடிக்கிறார்.