டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

சின்னத்திரையில் மோஸ்ட் வாண்டட் நடிகராக வலம் வந்த கார்த்திக் ராஜ் கடைசியாக 'செம்பருத்தி' சீரியலில் நடித்திருந்தார். கார்த்திக் ராஜ் - ஷபானா லவ் டிராக்கிற்காகவே செம்பருத்தி சீரியல் சூப்பர் ஹிட் அடித்து டாப் லிஸ்டில் இடம்பிடித்து வந்தது. இந்நிலையில் திடீரென செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்திக் ராஜ் விலக்கப்பட்டார். இதற்கிடையில் சினிமாவில் அவர் நடிக்க இருந்த படமும் தயாரிப்பாளர் தகராறால் கைவிடப்படும் நிலைக்கு சென்றது.
இதனையடுத்து தன்னை நடிக்கவிடாமல் செய்ய பெரிய அரசியல் நடந்து வருவதாக கார்த்திக் ராஜ் வெளிப்படையாக இண்ஸ்டாகிராமில் அறிவித்தார். மேலும், ரசிகர்கள் தனது படத்திற்காக உதவுமாறும் கேட்டுக்கொண்டு கே ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் க்ரவுட் பண்ட் கலெக்ட் செய்து வந்தார். ஆனால், அதிலும் போதிய அளவு நிதி கிடைக்காததால் படம் எடுக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டார். தொடர்ந்து இண்ஸ்டாகிராமிலும் அவர் சில காலங்களாக பெரிய அளவில் ஆக்டிவாக இல்லை. இதனால் கார்த்திக் ராஜ் ரசிகர்கள் பலரும் அவருக்கு என்ன ஆனதோ என்று வருத்தமடைந்தனர்.
இந்நிலையில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள கார்த்திக் ராஜ் தனது படம் குறித்த அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்த வீடியோவில், 'ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களின் உதவிகளாலும் பிரார்த்தனைகளாலும் எனது படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துவிட்டது. எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. மிக விரைவில் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும். கண்டிப்பாக என் படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்' என கூறியுள்ளார். இதனையடுத்து அவரது கமெண்ட் பாக்ஸை ரசிகர்கள் பலரும் வாழ்த்துச் செய்திகளால் நிரப்பி வருகின்றனர்.