‛‛திரும்பி போற ஐடியா இல்ல... ஐயம் கம்மிங்...'' : விஜயின் ‛ஜனநாயகன்' டிரைலர் வெளியீடு | ‛ஜனநாயகன்' சென்சார் சான்று தடுப்பது யாரோ.? | ‛தி ராஜா சாப்' திருப்புமுனையாக அமையும் : நிதி அகர்வால் நம்பிக்கை | பாக்யராஜ் 50 : முதல்வருக்கு அழைப்பு | பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் கிர்த்தி ஷெட்டி | யு.கே-வில் பராசக்தி முன்பதிவு விவரம் | முதல்வர் தலைமையில் ரஜினி, கமல் கலந்து கொள்ளும் நிகழ்வு எது தெரியுமா | மவுன படமான ‛காந்தி டாக்ஸ்' ஜனவரி 30ல் ரிலீஸ் | ரஜினியுடன் அனிருத் இணையும் 7வது படம் | சாயா தேவியின் 'அலப்பறை' |

நீண்ட இடைவெளிக்கு பிறகு வடிவேலு நாயகனாக நடிக்கும் படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். சுராஜ் இயக்கத்தில் காமெடி ஹீரோவாக நடித்துள்ளார். வருகிற டிசம்பர் 9ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் ஷிவானி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி, ஷிவாங்கி உள்ளிட்டவர்கள் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி ரைட்ஸ் குறித்த அறிவிப்பை தற்போது லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. சாட்டிலைட் உரிமையை முன்னணி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றும், ஒடிடி உரிமையை நெட்பிளிக்சும் வாங்கி விட்டதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுதவிர ரீமேக் மற்றும் வெளிநாட்டு உரிமத்தையும் சேர்த்தால் தியேட்டருக்கு வெளியிலேயே படம் லாபம் பார்த்து விடும் என்கிறார்கள்.