175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
யோகி பாபு, ஓவியா, ரோபோ சங்கர், சோனா உள்பட பலரது நடிப்பில் உருவாகி உள்ள படம் பூமர் அங்கிள். ஹாரர் காமெடி கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை கார்த்திக் தில்லை என்பவர் இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் டிரைலரை இயக்குனர் மிஷ்கின் வெளியிட்டார். அதில் யோகி பாபுவுடன் ஓவியா கவர்ச்சிகரமான ஒரு தோற்றத்தில் நடித்திருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. குறிப்பாக ஓவியா கவர்ச்சிகரமான ஆவி வேடத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு முதலில் காண்ட்ராக்டர் நேசமணி என்றுதான் டைட்டில் வைத்திருந்தார்கள். ஆனால் வடிவேலு அந்த டைட்டில் தனக்கு வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை எடுத்து பூமர் அங்கிள் என்று மாற்றினர். அதுமட்டுமின்றி இந்த படத்தின் கேரக்டர்களுக்கும் வொண்டர் வுமன், ஜோக்கர், ஹல்க் என ஹாலிவுட் படங்களில் இடம்பெறும் கேரக்டர்களின் பெயர்களை வைத்துள்ளார்கள். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதையடுத்து யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள தாதா என்ற படத்தின் டீசரும் இன்று வெளியாகிறது. இப்படத்தை டிசம்பர் 9ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளார்கள்.