அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிக்க 'த்ரிஷ்யம்' படத்தின் முதல் பாகம் 2013ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்றது. அந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, சிங்களம், சீன, இந்தோனேசிய மொழிகளிலும் ரீமேக் ஆகி வெளியானது.
மலையாள மொழியின் இரண்டாம் பாகம் கடந்த வருடம் ஓடிடி தளத்தில் வெளியானது. இரண்டாம் பாகத்தை கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகியவற்றில் ரீமேக் செய்து வெளியிட்டுள்ளார்கள். ஹிந்தி ரீமேக் அஜய் தேவகன், ஸ்ரேயா, தபு நடிக்க கடந்த வாரம் நவம்பர் 18ம் தேதி வெளியானது. அபிஷேப் பதக் இயக்கிய இந்தப் படம் ஒரு வாரத்தில் ரூ.100 கோடி வசூலைக் கடந்துள்ளது.
ஹிந்தியில் இந்தாண்டு வெளிவந்த படங்களில் குறிப்பிடத்தக்க ஒரு வெற்றியையும், வசூலையும் இந்தப் படம் பெற்றுள்ளது. சுமார் 50 கோடி செலவில் தயாராகியுள்ள இந்தப் படத்தின் தியேட்டர் வசூல் மட்டும் ரூ.100 கோடியைக் கடந்துள்ளது. ஓடிடி, சாட்டிலைட் ஆகிய உரிமைகளையும் சேர்த்தால் இந்தப் படம் பெரும் லாபத்தைக் கொடுக்கக் கூடிய ஒரு படமாக அமையப் போகிறது.
இந்த ஆண்டில் அஜய் தேவகன் கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'ரன் வே 34, தாங்க் காட்' ஆகிய படங்கள் தோல்வியடைந்த நிலையில் 'த்ரிஷ்யம் 2' வெற்றி அவருக்கு முக்கியமானதாக அமைந்துவிட்டது.