காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இந்திய சினிமாவின் அடையாளமாக பார்க்கப்படுகிறார். அவரது குரலில் பல விளம்பரங்கள் வெளிவந்துள்ளது. அவர் நடத்துவது போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. பல விளம்பரங்களில் அவரது அனுமதி இன்றி அவரது படம் பயன்படுத்தப்படுகிறது. அவர் பெயரில் நூற்றுக் கணக்கான இணைய தளங்கள் இருக்கிறது.
இந்த நிலையில் அமிதாப் பச்சன் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் ஹரீஷ் சால்வே, பிரவீன் ஆனந்த் ஆகியோர் டில்லி உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், அமிதாப் பச்சன் பெயரைப் பயன்படுத்தி, லாட்டரி சீட்டு நடைபெறுகிறது. போலியாக குரோர்பதி நிகழ்ச்சியை நடத்துகின்றனர். உடைகள், சுவரொட்டிகளில் அவர் புகைப்படங்களைப் பயன்படுத்துகின்றனர். அமிதாப் பச்சன் வீடியோ கால் என்ற போலி மொபைல் ஆப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே அமிதாப் பச்சன் பெயர், புகைப்படம், குரல் ஆகியவற்றை வணிக நோக்கத்துக்காக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதனை விசாரித்த நீதிபதி நவீன் சாவ்லா அமிதாப் பச்சன் அனுமதியின்றி அவர் பெயர், குரல், புகைப்படங்களைப் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டார்.