இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தமிழில் ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஸ்ரேயா. ஆனால், அதற்குப் பின் அவருக்கு தமிழில் சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் அமையவில்லை. இருப்பினும் தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளில் நடித்து வருகிறார்.
ஸ்ரேயா நடித்துள்ள ஹிந்திப் படமான 'த்ரிஷ்யம் 2' படம் கடந்த வாரம் வெளியாகி 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. அந்தப் படத்திற்கான சிறப்புக் காட்சி ஒன்றில் ஸ்ரேயா, அவரது கணவர் ஆன்ட்ரேய் கோஸ்சீவ் முத்தமிட்டுக் கொண்டனர். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. பொது இடத்தில் இப்படி முத்தமிட்டுக் கொள்வது சரியா என்று விமர்சனங்களும் எழுந்தது. ஆன்ட்ரேய் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்.
இந்த முத்த சர்ச்சை குறித்து ஸ்ரேயா கூறுகையில், “இது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. சிறப்பான தருணங்களில் ஆன்ட்ரேய் எனக்கு முத்தம் கொடுப்பது சாதாரணமான ஒன்று. அது சிறப்பானது என நான் கருதுகிறேன். ஒரு இயல்பான விஷயத்திற்காக ஏன் 'டிரோல்' செய்கிறார்கள் என அவருக்கும் புரியவில்லை. நான் மோசமான கமெண்ட்டுகளைப் படிப்பது கூட இல்லை. அப்படி எழுதுவது அவர்கள் வேலை, அதைத் தவிர்ப்பது எனது வேலை. எனக்கு என்ன தோன்றுகிறதோ அதை நான் செய்வேன்,” என்று விளக்கமளித்துள்ளார்.