300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
நடிகர் கவுதம் கார்த்திக்கும், நடிகை மஞ்சிமா மோகனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் தங்களது காதலை வெளிப்படுத்திய நிலையில் வருகிற 28ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளனர். இதையொட்டி சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்களை இருவரும் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கவுதம் கூறுகையில், "தேவராட்டம் படத்தில் நடித்த போது நண்பர்களாக இருந்தோம். அதன் பிறகு எங்களுக்குள் காதல் வந்தது.
நான்தான் முதலில் காதலை சொன்னேன். காதலை சொல்லிவிட்டு இரண்டு நாட்கள் பயந்து கொண்டே இருந்தேன். வீட்டில் சொன்ன போது ஏற்றுக் கொண்டனர். மஞ்சிமா என்னை நன்றாகப் பார்த்துக் கொள்வார், என்னை நல்லவனாக மாற்றி விட்டார் என்று அப்பா சொன்னார். இரு வீட்டார் சம்மதத்துடன் எங்களது திருமணம் வருகிற 28ஆம் தேதி நெருங்கிய குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்ள நடக்கிறது.
உங்கள் அனைவரின் வாழ்த்தும் தேவை. தேனிலவு பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. தற்போது சிம்புவுடன் பத்து தல படத்தில் நடிக்கிறேன். என் திருமண செய்தி கேட்டு சிம்பு வாழ்த்தினார்" என்றார்.
நடிகை மஞ்சிமா மோகன் பேசும்போது: உங்கள் அனைவரின் வாழ்த்தும் தேவை. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்றார்.