ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா | தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் | சயின்ஸ் பிக்சன் படத்திற்காக 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த குஞ்சாக்கோ-மஞ்சு வாரியர் | தனக்கு விருது வாங்கித் தந்த படத்தை 4 வருடமாகியும் பார்க்கத் தயங்கும் ரேவதி | அறிமுகப் படம் வெளியாகும் முன்பே அடுத்த வாய்ப்பு பெற்ற சிவகுமார் முருகேசன் | 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்த தடை | மோகன்லால் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பிரியதர்ஷன் | சிரஞ்சீவிக்கு முதல் திருமண அழைப்பிதழ் வைத்த அல்லு சிரிஷ் | 10 நாட்களில் ரூ.25 கோடி வசூலைக் கடந்த ‛வித் லவ்' | மரகதநாணயம் 2 படம் தொடங்கியது |

தெலுங்குத் திரையுலகத்தின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் மறைந்த நடிகர் கிருஷ்ணா. தெலுங்கில் 350 படங்களுக்கும் மேல் நடித்தவர். கடந்த வாரம் உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அவரது மகனும், முன்னணி தெலுங்கு நடிகருமான மகேஷ்பாபு அப்பாவுக்காக ஒரு நினைவாலயம் கட்டும் முடிவில் இருக்கிறாராம்.
அவர்களது குடும்பத்தினருக்குச் சொந்தமான பத்மாலயா ஸ்டுடியோ ஐதராபாத்தில் உள்ளது. அந்த இடத்தில் கிருஷ்ணாவுக்காக ஒரு நினைவாலயம் கட்டி, அதில் அவரது உருவச் சிலை, அவர் வாங்கிய விருதுகள், அவரது படங்கள் பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் என அனைத்தும் இடம் பெறும் வகையில் உருவாக்கப் போகிறாராம். தெலுங்கு நடிகர் ஒருவருக்கு இதுவரையிலும் யாரும் இப்படி ஒரு நினைவாலயம் அமைத்ததில்லை என்று சொல்லுமளவிற்கு அது இருக்க வேண்டும் என்பது மகேஷ்பாவுன் திட்டம் என்கிறார்கள். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வரலாம் என்பது டோலிவுட் தகவல்.




